சாம்பியன்ஸ் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 17–ந்தேதி முதல் அக்டோபர் 6–ந்தேதி வரை நடைபெறுகிறது.
இதன் தகுதி சுற்று ஆட்டம் 17–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை நடக்கிறது. தகுதி சுற்றுக்கான 6 ஆட்டங்களும் ஐதராபாத் ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறுவதால் சாம்பியன்ஸ் ‘லீக்’ தகுதி சுற்று போட்டிக்கு தங்களால் பாதுகாப்பு அளிக்க முடியாது என்று ஐதராபாத் போலீசார் அறிவித்து இருந்தனர்.
இதனால் சாம்பியன்ஸ் ‘லீக்’ தகுதி சுற்று ஆட்டம் மட்டும் ஐதராபாத்தில் இருந்து வேறுஇடத்துக்கு மாற்றப்படும் என்றும், முதன்மை சுற்று ஆட்டங்கள் அங்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் சாம்பியன் ‘லீக்’ போட்டிக்கான இடத்தில் இருந்து ஐதராபாத் நீக்கப்பட்டுள்ளது.
அங்கு எந்த ஒரு போட்டியும் நடக்காது என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு நடைபெற இருந்த 12 ஆட்டங்களும் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
17–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை நடைபெற இருந்த 6 தகுதி சுற்று ஆட்டங்கள் மொகாலிக்கு மாற்றப்பட் டுள்ளது. இதேபோல அங்கு 24–ந்தேதி நடைபெற இருந்த முதன்மை சுற்றின் 2 ஆட்டமும் மொகாலிக்கு மாற்றப்பட்டுள்ளது.
28–ந்தேதி நடைபெற இருந்த ஆட்டம் (2) ராஞ்சிக்கும், 30–ந்தேதி நடைபெற இருந்த ஆட்டம் (2) அகமதாபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
தகுதி சுற்று ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் (ஐ.பி.எல்.லில் 4–வது இடம்), சைபலாபாத் வால்வோஸ் (பாகிஸ்தான்), ஒடாகோஹேட்ஸ் (நியூசி லாந்து) கனுராதா மரூண்ஸ் (இலங்கை) ஆகிய 4 அணிகள் விளையாடுகின்றன. இதில் 2 அணிகள் முதன்மை சுற்றுக்கு தகுதி பெறும்.
ஐ.பி.எல். சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட், பெர்த் ஸ்கோர்சர்ஸ் (ஆஸ்தி ரேலியா), லயன்ஸ், டைட்டன்ஸ் (தென் ஆப்பிரிக்கா), டிரினி டாட் டொபாக்கோ (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியவை நேரடியாக முதன்மை சுற்றில் ஆடுகின்றன.