காயம் காரணமாக ஓய்வு பெற்ற பிரான்சின் மரியன் பர்டோலி, ஹாப்மேன் கோப்பை தொடரில் பங்கேற்கிறார்.
பிரான்ஸ் டென்னிஸ் வீராங்கனை மரியன் பர்டோலி, 28. கடந்த 13 ஆண்டுகளாக சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று வந்த இவர், சமீபத்தில் முடிந்த விம்பிள்டன் தொடரில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார்.
பின், ஆக., 15ல் சர்வதேச டென்னிஸ் அரங்கில் இருந்து ஓய்வுபெறுவதாக திடீரென அறிவித்தார். இப்போது மீண்டும் டென்னிஸ் அரங்கிற்கு திரும்புகிறார்.
வரும் டிச. 28, 2013- ஜன. 4, 2014 ல் ஆஸ்திரேலியாவின் பெர்த்தில், கலப்பு இரட்டையர் அணிகள் பங்கேற்கும் ஹாப்மேன் தொடருக்கான அணியை பிரான்ஸ் தேர்வு செய்தது. இதில் பர்டோலி, டி சோங்கா இணைந்து பங்கேற்கவுள்ளனர்
