சூப்பர் கோப்பை கால்பந்து:பேயர்ன் முனிக் சாம்பியன்

சூப்பர் கோப்பை கால்பந்து போட்டியில், பேயர்ன் முனிக் அணி சாம்பியன் கோப்பை வென்றது. செல்சி அணியை "பெனால்டி ஷூட் அவுட்' முறையில் வீழ்த்தியது.
ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் (யு.இ.எப்.ஏ.,) சார்பில், 38வது சூப்பர் கோப்பை கால்பந்து போட்டி, செக் குடியரசில் உள்ள பிராகா நகரில் நடந்தது. இதில், சாம்பியன்ஸ் லீக் மற்றும் ஐரோப்பிய லீக் தொடர்களின் "நடப்பு சாம்பியன்' அணிகள் மோதும். இதன்படி, செல்சி (சாம்பியன்ஸ் லீக்), பேயர்ன் முனிக் (ஐரோப்பிய லீக்) அணிகள் மோதின.

ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் செல்சி அணியின் பெர்ணான்டோ டோரஸ் முதல் கோல் அடித்தார். இதற்கு பேயர்ன் முனிக் அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் செல்சி அணி 1-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட பேயர்ன் முனிக் அணிக்கு 47வது நிமிடத்தில் பிராங்க் ரிபெரி கோல் அடித்தார். இதற்கு, 93வது நிமிடத்தில் செல்சி அணியின் ஈடன் ஹஜார்டு ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். தொடர்ந்து போராடிய பேயர்ன் முனிக் அணிக்கு, "ஸ்டாபேஜ்' நிமிடத்தில் (120+1வது) ஜாவி மார்டினஸ் ஒரு கோல் அடித்தார்.
ஆட்டநேர முடிவில், போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தது. கூடுதல் நேரத்திலும் இரு அணி வீரர்கள் கோல் எதுவும் அடிக்காததால், போட்டியின் முடிவு "பெனால்டி ஷூட் அவுட்' முறைக்கு சென்றது. இதில் அபாரமாக ஆடிய பேயர்ன் முனிக் அணி 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.