காலிறுதியில் நடால் * பெடரர் அவுட்

யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு ஸ்பெயினின் ரபெல் நடால், டேவிட் பெரரர் ஆகியோர் முன்னேறினார். நான்காவது சுற்றில் தோல்வியடைந்த சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் வெளியேறினார். 
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயினின் டாமி ராபர்டோவை சந்தித்தார். இதில் துவக்கம் முதல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெடரர் "டைபிரேக்கர்' வரை சென்ற முதல் செட்டை 6-7 என இழந்தார். தொடர்ந்து தடுமாறிய பெடரர் அடுத்த இரண்டு செட்களையும் 3-6, 4-6 என கோட்டைவிட்டார். 
முடிவில் சுவிட்சர்லாந்தின் பெடரர், 6-7, 3-6, 4-6 என்ற நேர்செட்களில் தோல்வியடைந்து வெளியேறினார். 
 மற்றொரு போட்டியில், ஸ்பெயினின் ரபெல் நடால், ஜெர்மனியின் பிலிப்பை 6-7, 6-4, 6-3, 6-1 என்ற செட்களில் வீழ்த்தி, காலிறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் டேவிட் பெரரர், செர்பியாவின் ஜான்கோ டிப்சர்விச்சை 7-6, 3-6, 7-5, 7-6 என்ற செட்களில் வென்று காலிறுதிக்குள் நுழைந்தார்