சூப்பர் கோப்பை வென்றது பார்சிலோனா

லா லிகா' தொடர் சாம்பியன் பார்சிலோனா, "கோபா டெல் ரே' தொடரில் கோப்பை வென்ற அத்லெட்டிகோ மாட்ரிட் அணிகளுக்கு இடையில் "ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை' தொடர் (2 போட்டி) நடந்தது. 

இதன் முதல் லீக் போட்டி 1-1 என, "டிரா' ஆனது. இரண்டாவது போட்டி பார்சிலோனாவில் நடந்தது. இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் வீணாகின. இதையடுத்து போட்டி 0-0 என, "டிரா' ஆனது. இருப்பினும், இதற்கு முன்பு அடித்த கோல் அடிப்படையில், பார்சிலோனா அணிக்கு சாம்பியன் பட்டம் கிடைத்தது. 
கடந்த ஐந்து ஆண்டுகளில், பார்சிலோனா அணி வெல்லும் 4வது சூப்பர் கோப்பை இது. தவிர, சூப்பர் கோப்பை வரலாற்றில் 2 லீக் போட்டியிலும் வெற்றி பெறாத ஒரு அணி, கோப்பை வெல்வது இது தான் முதன் முறை