லிவர்பூல் அணிக்கு எதிரான பிரிமியர் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டியில், மான்செஸ்டர் யுனைடெட் அணி தோல்வியடைந்தது.
இங்கிலாந்தில் பிரிமியர் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் "நடப்பு சாம்பியன்' மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல் அணிகள் மோதின. ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் டேனியல் முதல் கோல் அடித்தார். இதற்கு மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் லிவர்பூல் அணி 1-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியில், கடைசி நிமிடம் வரை போராடிய இரு அணி வீரர்களால் கூடுதலாக ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில், மான்செஸ்டர் யுனைடெட் அணி 0-1 என தோல்வியடைந்தது.
மற்றொரு போட்டியில் ஆர்சனல் அணி, டாட்டன்ஹாம் அணியை 1-0 என வீழ்த்தியது. வெஸ்ட் பிரவுன்விச் அணி 0-2 என சுவான்சியா சிட்டி அணியிடம் தோல்வியடைந்தது