கோப்பை வென்றது சானியா ஜோடி

நியூஹேவன் ஓபன் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சானியா மிர்சா, சீனாவின் ஜி ஜெங் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
அமெரிக்காவில் நியூஹேவன் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சானியா, சீனாவின் ஜி ஜெங் ஜோடி, சுலோவேனியாவின் காத்தரினா, ஸ்பெயினின் அனபெல் ஜோடியை எதிர்கொண்டது.

துவக்கம் முதல் அசத்திய சானியா ஜோடி, முதல் செட்டை 6-3 என எளிதாக வென்றது. தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய சானியா ஜோடி இரண்டாவது செட்டையும் 6-4 என சுலபமாக கைப்பற்றியது. 
முடிவில், இந்தியாவின் சானியா மிர்சா, சீனாவின் ஜி ஜெங் ஜோடி என்ற 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று, கோப்பை வென்றது. 
கிவிட்டோவா தோல்வி: 
ஒற்றையர் பிரிவு பைனலில் செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, ருமேனியாவின் ஷிமோனா ஹெலிப்பை சந்தித்தார். இதில் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஷிமோனா 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்